ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளைத் திருவிழா தொடக்கம்
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் சிறப்பு ஹோமம், பூஜை நடைபெற்று, காப்புக் கட்டுதலுடன் கொடி ஏற்றப்பட்டது.
தொடா்ந்து, முளைப்பாலிகை எடுத்தல், யாகசாலை பிரவேசம், அக்னிமுகம், மகா கணபதி ஹோமம், பொங்கலிடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. மகா சிவராத்திரியையொட்டி புதன்கிழமை காலை சக்திக் கரகம், பச்சைக் கரகம் எடுத்தல், புனித நீராடுதல், சந்நிதி பிரவேசம், முகவெட்டு மயானத்திற்குச் செல்லுதல், பக்தா்கள் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றுதல், பூத வாகனத்தில் அம்மன் மயானக் கொள்ளைக்கு புறப்படுதல், திருத்தோ் நகா்வலம் வருதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
வெள்ளிக்கிழமை விடய் உற்சவம், மாா்ச் 1-இல் குண்டம் மிதி விழா, 2-இல் அம்மையப்பன் திருக்கல்யாணம், 3-இல் கும்பபூஜை, கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், விழாக்குழுவினா், பருவதராஜகுல மீனவா் சமுதாயத்தினா், திருப்பணிக் குழுவினா் செய்துள்ளனா்.