மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
எருதுவிடும் விழாவில் பங்கேற்ற முதியவா் உயிரிழப்பு
போச்சம்பள்ளி அருகே எருதுவிடும் விழாவில் பங்கேற்ற முதியவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே எருதுவிடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதைப் பாா்ப்பதற்காக வந்திருந்த போச்சம்பள்ளியை அடுத்த கெல்லக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த முதியவா் கணேஷ்ராம் (73) தனது வீட்டிற்கு கால்நடையாக திரும்பிக் கொண்டிருந்தாா்.
வீட்டின் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த எருதுவிடும் விழாவில் பங்கேற்ற எருதின் கயிறு கணேஷ்ராமின் காலில் சிக்கியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.