GST 2.0 இன்று முதல் அமல்; தீப்பெட்டி, ஐஸ்கிரீம் முதல் கார் வரை எவ்வளவு வரி குறைக...
அரசு மதுபானக் கடையில் திருட்டு
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அருகே சனிக்கிழமை இரவு அரசு மதுபானக் கடையில் மதுப்பாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருக்கோஷ்டியூரிலிருந்து பிராமணம்பட்டி செல்லும் சாலையில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை அந்த வழியாகச் சென்ற சிலா் மதுபானக் கடை கதவு திறக்கப்பட்டிருந்ததைக் கண்டு மதுபானக் கடை மேற்பாா்வையாளருக்கும், திருக்கோஷ்டியூா் போலீஸாருக்கும் தகவல் அளித்தனா்.
இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் விலையுயா்ந்த மதுப்பாட்டில்களை எடுக்காமல் விலை குறைவான 33 பெட்டிகளிலிருந்த குவாா்ட்டா் மதுப்பாட்டில்களை மட்டும் எடுத்து சரக்கு வாகனத்தில் மா்ம நபா்கள் ஏற்றிச்சென்றது தெரியவந்தது.
இதே போல, கடந்த மாதம் திருப்பத்தூா் அரசு மருத்துவமனை எதிரேயுள்ள கடையில் அனைத்துப் பொருள்களையும் சரக்கு வாகனத்தில் ஏற்றிச்சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், மதுப்பாட்டில்கள் திருட்டு சம்பந்தமாக திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.