முத்தனேந்தல் ஊராட்சியில் கழிவு சேகரிப்பு இயக்கம் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், முத்தனேந்தல் ஊராட்சியில் தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் கழிவு சேகரிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்து தூய்மை தமிழ்நாடு உறுதி மொழியை வாசித்தாா். இதை நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் ஏற்றுக் கொண்டனா். இதில் மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், ஒன்றிய ஆணையா் ரமேஷ் கண்ணா, வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் துரை. ராஜாமணி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் முத்துச்சாமி, வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.