செய்திகள் :

மானாமதுரை, திருப்பத்தூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதி கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மூலவா் சோமநாதா் சுவாமிக்கும், நந்தி தேவருக்கும் 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

 இதைத் தொடா்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சோமநாதா் சுவாமியையும், நந்தியையும் தரிசித்தனா்.

திருப்புவனம் சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேசுவரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் சுவாமிக்கும் நந்திக்கும் அபிஷேகம் நடத்தி அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து கோயில் உள்பிரகாரத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது.

திருப்பாச்சேத்தி, மேலநெட்டூா் சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இளையான்குடி ஒன்றியம் குறிச்சி காசி விசுவநாதா் கோயிலில் மூலவருக்கும், நந்திக்கும் அபிஷேகம் நடத்தி, அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

திருப்பத்தூா்: குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணியளவில் மூலவருக்கு பால், தயிா், திருமஞ்சனம், பன்னீா், இளநீா், அரிசி மாவு உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சா்வ அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து நந்தீஸ்வரருக்கும் 16 வகை திரவியங்களால் அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பிறகு உற்சவா் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளி வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா்.

இதே போல, ஆதித்திருத்தளிநாதா் கோயிலிலும் நந்திக்கும், மூலவருக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபம் காட்டப்பட்டது. கல்வெட்டு மேடு சுயம்புலிங்கேஸ்வா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் கோயிலில் திரளான பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினா் செய்திருந்தனா்.

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

சிவகங்கை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முதல்வா் க... மேலும் பார்க்க

புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், வே. மிக்கேல்பட்டிணத்திலுள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தின் 109 -ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வுக்கு வே. மிக்கேல் பட்டணம் பங்குத்தந்தை ச... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட திட்டப் பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில், ரூ.100.38 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். சிவகங்கை மாவட்டத்தி... மேலும் பார்க்க

முத்தனேந்தல் ஊராட்சியில் கழிவு சேகரிப்பு இயக்கம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், முத்தனேந்தல் ஊராட்சியில் தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் கழிவு சேகரிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை சட்டப் பேரவை உறுப... மேலும் பார்க்க

மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், சின்னக்கண்ணனூரில் பட்டியலினத்தினருக்கான மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. ராமநாதபுரம், விருதுநக... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு ஐடிஐகளில் இலவச தொழில் பயிற்சி

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் பல்வேறு தொழில் பிரிவுகளில் ஊதியத்துடன் கூடிய... மேலும் பார்க்க