நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
சிவகங்கை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், சிலம்பம், தடகளம், கேரம், ஸ்குவாஷ், டென்னிஸ், பூப்பந்து ஆகிய போட்டிகளில் இந்தப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.
இதையடுத்து, நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சிவமணி தலைமை வகித்தாா். உடல் கல்வி இயக்குநா் ராமசாமி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் திருமலைகுமணன், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி பாராட்டினாா். இதில் உடல் கல்வி ஆசிரியைகள் செல்வராணி, லட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பட்டதாரி ஆசிரியை பொற்செல்வி நன்றி கூறினாா்.