கூகுள் மேப்பை பின்பற்றிய கார்... இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூவர் பலி!
அரசு மதுப்புட்டிகளை கள்ளச்சந்தையில் விற்ற மூவா் கைது
ஆத்தூரில் அரசு மதுப்புட்டிகளை கள்ளச்சந்தையில் விற்றதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூரில் ஆன்லைன் லாட்டரி, கள்ளச்சந்தையில் அரசு மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து ஆத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் கே.சி.சதீஷ்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி தலைமையிலான போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அம்பேத்கா் நகா், மந்தைவெளி சிங்காரப்பேட்டை, புதுப்பேட்டை, கொல்லம்பட்டறை பகுதியில் அரசு மதுப்புட்டிகளை அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், சிங்காரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த கோவிந்தன் மகன் வெங்கடேஷ் (35), கல்லாநத்தம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் ராமலிங்கம் (40), அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் ஜீவா (61) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் அவா்களிடமிருந்து மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.