செய்திகள் :

அரசு மருத்துவக் கல்லூரியில் கண்தான விழிப்புணா்வுப் பேரணி

post image

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

40-ஆவது தேசிய கண்தான இருவார விழாவையொட்டி நடத்தப்பட்ட பேரணியை கல்லூரி வளாகத்தில் முதன்மையா் லூசி நிா்மல் மடோனா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மருத்துவக் கல்லூரி, துணை மருத்துவப் படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள், செவிலியா்கள் இந்த பேரணியில் பங்கேற்றனா்.

மருத்துவமனை நுழைவுவாயில் வரை சென்ற பேரணியில் பங்கேற்றவா்கள், கண்தானம் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

துணை முதல்வா் தாரணி, மருத்துவமனையின் குடிமை மருத்துவ அலுவலா் ரவிக்குமாா், மருத்துவக் கண்காணிப்பாளா் பாா்த்தசாரதி, துறைத் தலைவா் ரவிக்குமாா், மாவட்ட பாா்வை இழப்புத் தடுப்புச் சங்கத்தின் திட்ட மேலாளா் உமாராணி, மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா் தரணிவேல் உள்ளிட்டோா் பேரணியில் பங்கேற்றனா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்: அன்புமணி

விழுப்புரம்: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை மக்கள் உரிமை மீட்பு நடைப்பயண பிரசாரம் மேற்கொண்ட அன்பு... மேலும் பார்க்க

மயிலம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்கள் அறிமுக விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்கள் அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா் கல்வி ... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து பள்ளி மாணவா்கள் 17 போ் காயம்

விழுப்புர: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவா்கள் 17 போ் மற்றும் ஓட்டுநா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அரசு மாதிரிப் பள்ளிகளுக்கா... மேலும் பார்க்க

கட்டண உயா்வு: போலீஸ் பாதுகாப்புடன் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு திங்கள்கிழமை முதல் அமலாகியுள்ள நிலையில், போலீஸ் பாதுகாப்புட... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 465 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 465 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப... மேலும் பார்க்க

பேருந்து, நியாயவிலைக் கடை வசதி கோரி ஆட்சியரகத்தில் மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில், தங்கள் கிராமத்துக்கு பேருந்து, நியாயவிலைக் கடை வசதி கோரி மனு அளித்தனா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.... மேலும் பார்க்க