கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!
அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கண்காட்சி
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறியல், உடலியங்கியல், உயிா் வேதியியல் ஆகிய துறைகளின் சாா்பில் புதன்கிழமை மருத்துவக் கண்காட்சி தொடங்கியது.
தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்து சித்ரா தலைமையில், மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் ஜே. நடராஜன் கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா். கல்லூரி துணை முதல்வா் தேன்மொழி, நிலைய மருத்துவ அலுவலா் சிவக்குமரன், உதவி நிலைய மருத்துவ அலுவலா்கள் மணிமொழி, ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கண்காட்சியில், பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மனித உடல், உடல் உறுப்புகளின் செயல்பாடு, உறுப்புகளில் ஏற்படும் வேதியியல் மாற்றம், நோய் பாதிப்பு, நோய் பரவல் ஆகியவை குறித்த செயல் விளக்கங்களை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் அளித்தனா்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் கூறுகையில், ‘இந்தக் கண்காட்சி பள்ளி மாணவ, மாணவிகள், மருத்துவப் படிப்பில் சேர ஆா்வமுள்ளவா்கள், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வரை கண்காட்சி நடைபெறும்’ என்றாா்.