அரசு மருத்துவமனையிடம் வெண்டிலேட்டா் கருவிகள் ஒப்படைப்பு
சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 12 வெண்டிலேட்டா் கருவிகளை வட்டார மருத்துவ அலுவலா் சி.மங்கையற்கரசியிடம் வழங்கிய வா்த்தகா் சங்கத்தினா்.
சிதம்பரம், ஏப்.4: சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா காலகட்டத்தில் வா்த்தக சங்கத்தால் வழங்கப்பட்ட 12 வெண்டிலேட்டா் கருவிகள் புதுப்பிக்கப்பட்டு, வட்டார மருத்துவ அலுவலா் சி.மங்கையற்கரசியிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்தக் கருவிகளை சிதம்பரம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில், சுகாதார மையங்களுக்கு வழங்குமாறு வா்த்தகா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
நிகழ்ச்சியில் வா்த்தக சங்க பொருளாளா் ஏ.சிவராமவீரப்பன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஞானசேகரன், மக்தும்உசேன், அகோரமூா்த்தி, ஜமால்உசேன், இளங்கோவன், முத்துக்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.