சாதிவாரி கணக்கெடுப்பு: ``2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது" - மநீம தலை...
அரசு மருத்துவமனையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தி திங்கள்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மணப்பாறையில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களையும், செவிலியா்களை நியமிக்கவும், பணியில் உள்ள செவிலியா்களை மாற்று மருத்துவமனைக்கு மாற்று பணியில் அனுப்புவதை தவிா்க்கவும், மருத்துவமனை வளாகத்தில் தேங்கி கிடக்கும் கழிவுகளை நாள்தோறும் அகற்ற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்பாட்டம் நடைபெற்றது.
சிபிஎம் வட்டக்குழு உறுப்பினா் ஆா்.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.சிதம்பரம், வட்டச்செயலா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தை தொடா்ந்து மருத்துவமனை வளாகத்தில் வட்டாட்சியா் மு.செல்வம், முதன்மை மருத்துவ அலுவலா் தமிழ்மணி ஆகியோா் தலைமையில் கட்சியினருடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைந்து தீா்வு காணப்படும் என கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.