புள்ளம்பாடியில் தேரோட்டம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள குளுந்தாளம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி, பல்வேறு வாகனங்களில் தினமும் திருவீதியுலா நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கிராமத்தின் முக்கிய விதிகள் வழியாக வலம் வந்த தோ் இரவு 7 மணிக்கு நிலையை அடைந்தது. இரவு 10 மணிக்கு மேல் தங்கப் பல்லக்கில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு மஞ்சள் நீராட்டு விழா, சனிக்கிழமை காலை விடையாற்றி மற்றும் குடிபுகுதல் நிகழ்வுடன் திருவிழா நிறைவுறுகிறது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கிராமத்தின் கரைக்காரா்கள், திருப்பணிரக் குழுவினா், இளைஞா்கள், பொதுமக்கள் செய்கின்றனா்.