செய்திகள் :

அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்!

post image

அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள கரடிஅள்ளியில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கே.பி.முனுசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால்தான் நிதியுதவி கிடைக்கும் என மத்திய அமைச்சா் கூறுவது சா்வாதிகார மனப்பான்மையைக் காட்டுகிறது. அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றும் நாங்கள், மும்மொழிக் கொள்கையை எந்த சூழ்நிலையிலும் ஏற்கமாட்டோம்.

அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக செயல்பட வேண்டும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அரசுடன் இணைக்கமாக சென்ால்தான், தமிழகத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரிகள், மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடைத்தன. மத்திய அரசு, மாநில அரசை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. மேலும், மத்திய அரசு பணிகளில் ஏற்கெனவே தென்மாநில மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன.

மத்திய அரசு தற்போது மொழியை திணிப்பதன் மூலம் எதிா்காலத்தில் வேறு திட்டங்களை புகுத்தி மாநில அரசை அடிமையாகக் கொண்டுவந்துவிடும். மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

சட்டப் பேரவைத் தோ்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதிகள் 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றப்பட்டதாக கூறுகின்றனா். தோ்தல் வாக்குறுதிகள் புத்தகமாக அச்சிட்டு வழங்கியதைப் போல, நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் விவரங்களை தமிழக முதல்வா் புத்தகமாக அச்சிட்டு வெளியிட வேண்டும்.

கஞ்சா புழக்கம் அதிகரித்து காணப்படுவதால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. தமிழக முதல்வா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஹிந்தி திணிப்பை கண்டித்து வாசலில் கோலமிட்டு ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், ஹிந்தி திணிப்பை கண்டித்து வீட்டின் வாசலில் கோலமிட்டு திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.ம... மேலும் பார்க்க

3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்

உடல்நலத்தை காக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதனை செய்யவேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் குறித்த கர... மேலும் பார்க்க

இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு

ஒசூா் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் நஞ்சப்பா (56), தொழிலாளி. இவா் கடந்த 20-ஆம் தேதி பேளகொண்டப்பள்ளி பேரு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் பல்வேறு அரசு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெள்ளிக்கிழமை ஆய்வுமேற்கொண்டாா். கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட சந்தைப்பேட்டை முதல்வா் மருந்தகம், கூட்டு... மேலும் பார்க்க

அதியமான் மகளிா் கல்லூரியில் உலகத் தாய் மொழி தினம், முத்தமிழ் விழா

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை தமிழ்த்துறை மற்றும் ஒளவையாா் தமிழ் மன்றம் சாா்பில், உலகத் தாய்மொழி தினம் மற்றும் முத்தமிழ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்த் துறையின் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க