சேஸிங்கில் புதிய வரலாறு..! 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலியா அபார...
இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு
ஒசூா் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் நஞ்சப்பா (56), தொழிலாளி. இவா் கடந்த 20-ஆம் தேதி பேளகொண்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த நஞ்சப்பாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒசூா் வட்டம், ஆவலப்பள்ளி அருகே உள்ள புனுகன்தொட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (34), கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 20-ஆம் தேதி மாலை ஒசூா் - கிருஷ்ணகிரி சாலை சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவ்வழியாக சென்ற மினிலாரி அவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமியை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.