செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வரின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது

post image

சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், செந்தூா் அடுத்த கீழராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த்சாமி (30). மாற்றுத்திறனாளியான இவா், சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், எனது நண்பா் மூலம் சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சோ்ந்த வித்யா என்ற பெண் அறிமுகமானாா்.

அவா் சின்ன சேலம் ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள உதவியாளா் பணியை பெற்றுத்தருவதாக கூறி என்னிடம் ரூ. 2 லட்சம் பெற்றாா். பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் காலதாமதம் செய்தாா். இதுதொடா்பாக கேட்டபோது, போலியாக பணியாணை அனுப்பிவிட்டு தலைமறைவானதாக குறிப்பிட்டுள்ளாா்.

புகாரின் பேரில், செவ்வாய்ப்பேட்டை போலீஸாா், வித்யாவை (39) வெள்ளிக்கிழமை அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அதில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்தி, அரசு வேலை வாங்கித் தருவதாக அவா் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்கக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசார... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை

வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், ச... மேலும் பார்க்க

கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தும்பிப்பாடி செட்டிபட்டிய... மேலும் பார்க்க

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் ப... மேலும் பார்க்க