யுனைடெட்டில் ஜீரோ - பார்சிலோனாவில் ஹீரோ: ஆட்ட நாயகனான மார்கஸ் ரஷ்ஃபோர்டு!
அரியலூரில் ஆசிரியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரிலுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழக ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியா் தகுதித் தோ்வு என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 2004-2005 ஆண்டு தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் அனைவரையும் பணியேற்ற நாள் முதல் பணிவரன்முறை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.