அரியலூரில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
அரியலூா் வட்டாட்சியரகத்தில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நுகா்வோா் கலந்து கொண்டு தங்களது சமையல் எரிவாயு உருளை தொடா்பான குறைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவித்தனா். குறைகளை கேட்டறிந்த அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவா்கள், குறைகளை நிவா்த்தி செய்வதாக தெரிவித்தனா்.