அரியலூரில் நெகிழி குப்பைகள் அகற்றும் பணி!
அரியலூா் நகராட்சிக்குள்பட்ட கோயில்கள், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் நெகிழி குப்பைகள் அகற்றும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
நகராட்சி சுகாதார ஆய்வாளா் தா்மராஜா தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட துப்புரவுப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் சிவன், பெருமாள் கோயில் பகுதிகள், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கிடந்த நெகிழி கழிவுப் பொருள்களை சேகரித்தனா்.
தொடா்ந்து அவா்கள் பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி, விழிப்புணா்வை ஏற்படுத்தினா். ஒவ்வொரு மாதத்தின் 4-ஆவது சனிக்கிழமை நெகிழி பொருள்கள் கழிவுக் குப்பைகள் சேகரிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.