தீவிரவாதிகளுக்கு ஆதரவு: ``அமெரிக்காவுக்காக மோசமான வேலையை செய்து வருகிறோம்'' - பா...
அரியலூரில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்
காலிப் பணியிடங்கை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பில் செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், கிராம ஊழியா் முதல் வட்டாட்சியா் வரையிலான வருவாய்த்துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலா்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேரிடா் மற்றும் நில அளவையா் பணியிடங்களை வெளிமுகமை மூலம் தற்காலிகமாக நியமிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆனந்தவேல் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.