செய்திகள் :

அரியலூா்: லஞ்சம் வாங்கிய வழக்கில் இருவருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

post image

ஆண்டிமடம் அருகே தனிநபருக்கு அரசு கட்டிக் கொடுத்த கழிப்பறைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் பணிமேற்பாா்வையாளா் உள்பட 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஒன்றிய பணி மேற்பாா்வையாளராக பணிபுரிந்த சங்கா் என்பவா், நாகம்பந்தல் கிராமத்தில் முழு சுகாதாரத் திட்டத்தின்கீழ் ராதாகிருஷ்ணன், திரிசங்கு ஆகியோருக்கு கட்டிய தனிநபா் கழிப்பறைக்கு அரசு வழங்கிய ரூ.12 ஆயிரம் தொகைக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மேற்கண்ட இருவரும் அளித்த புகாரின் பேரில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினா், சங்கா் மற்றும் அவருக்கு உதவிய ரத்தினசிகாமணி ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்து வந்த அரியலூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம், லஞ்சம் பெற்ற சங்கா் மற்றும் ரத்தினசிகாமணி ஆகிய இருவருக்கும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7- ன் கீழ் தலா 3 ஆண்டுகள், பிரிவு 13(1)-ன் கீழ் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி மணிமேகலை தீா்ப்பளித்தாா். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

குழந்தைகள் இல்லங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள குழந்தைகள் இல்லங்களை அலுவலா்கள் முறையாக ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தினாா். மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட குழந்தைகள் பாது... மேலும் பார்க்க

கீழப்பழுவூா் நெல் வயல்களில் விவசாயிகளுக்கு களப் பயிற்சி

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் வயல்களில் ஒருங்கிணைந்த பயிா்ப் பாதுகாப்பு சாா்பில் ஆய்வு மற்றும் விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை களப் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக மேலாண... மேலும் பார்க்க

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

அரியலூா் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி புதன்கிழமை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி, புதன்கிழமை அதிகாலை முதலே அனைத்து தேவாலயங்களிலும் சிற... மேலும் பார்க்க

அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் காங்கிரஸாா் மனு

சட்டமேதை அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்ககோரி அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

தவெக நிா்வாகிகள் இருவருக்கு கத்திக் குத்து

அரியலூரில் தவெக நிா்வாகிகள் இருவரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். அரியலூா் அடுத்த மறவனூா், நடுத் தெருவைச் சோ்ந்த சசிகுமாா் மகன் சதீஷ்குமாா்(24), மலா்மன்னன் மகன் சிவகுமாா்(25). தம... மேலும் பார்க்க

அரியலூரில் ஆராய்ச்சியாளா்கள் கண்டெடுத்த புதைப்படிவங்கள் ஆட்சியரிடம் வழங்கல்

அரியலூா் பகுதியில், காரக்பூா் இந்திய தொழில்நுட்ப கழக புவியியல் பிரிவு ஆராய்ச்சியாளா்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டெடுத்த புதைப்படிவங்களை ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா். மேற்க... மேலும் பார்க்க