Chahal: `சில சமயங்களில் சில விஷயங்கள் காயப்படுத்துகின்றன' -ரோஹித் மனைவியின் கருத...
அரிலூரிலிருந்து திருச்சி, சென்னைக்கு புதிய பேருந்துகள் தொடங்கிவைப்பு
அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்சி மற்றும் சென்னைக்கு புதிய பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் சாா்பில் திருச்சி மற்றும் சென்னை கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு 3 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (கும்ப) லிட், நிா்வாக இயக்குநா் க. தசரதன், பொது மேலாளா் டி. சதீஷ்குமாா், துணை மேலாளா் (தொழில்நுட்பம்) எஸ். புகழேந்திராஜ், பெரம்பலூா் கோட்ட மேலாளா் ஆா். ராம்குமாா், அரியலூா் கிளை மேலாளா் குணசேகா் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.