நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்
ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரனின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்துக்கும் மேலாக சிபு சோரன் உடல் நலம் பாதித்திருந்ததாகக் கூறப்படுகிறது. புது தில்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில, கடந்த ஒரு சில நாள்களாக உடல்நிலை மோசமடைந்துவந்த நிலையில் இன்று காலமானார்.
இதுதொடர்பாக மமதாவின் எக்ஸ் பதிவில்,
ஷிபு சோரனின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஜார்க்கண்ட் முதல்வர், அத்துடன் அவரது முழு குடும்பத்தினர், அவரது அனைத்து ஆதரவாளர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
ஜார்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். சிபு சோரனை நன்கு அறிந்திருப்பதாகவும், அவரை உண்மையாக மதிப்பதாகவும் மமதா கூறினார்.