செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!
MP Sudha: `லேசான காயம்' - டெல்லியில் தமிழக எம்.பி சுதாவின் செயின் பறிப்பு!
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவருவதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கிறார் மயிலாடு துறை காங்கிரஸ் எம்.பி. சுதா.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 4) காலை 6 மணி அளவில் பார்லிமென்ட் விடுதி பகுதியில் உள்ள சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் எம்.பி சுதா அணிந்திருந்த 4.5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. சுதா புகார் அளித்திருக்கிறார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.