செய்திகள் :

திருப்பத்தூர்: கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் தெருநாய்கள்; அச்சத்தில் பொதுமக்கள் மக்கள்!

post image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அமைந்துள்ள ஜாப்ராபாத் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் கட்டுப்பாடின்றி சாலைகளில் சுற்றி திரிவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுமக்களை மட்டுமல்லாது ஆடு, கோழி போன்றவைகளையும் தெருநாய்கள் தாக்குவதால் அப்பகுதிகளில் தெருநாய் தொல்லை பெரும் பிரச்னையாக இருக்கிறது.

திருப்பத்தூர் -ஜாப்ராபாத்
திருப்பத்தூர் -ஜாப்ராபாத்

இதுபற்றி அப்பகுதி மக்கள், "தெருநாய்கள் ஒட்டுமொத்தமாக கூட்டமாக சுற்றுகின்றன.

இரவு நேரங்களில் சாலையில் செல்வோர்களையும், இருசக்கர வாகனங்களையும் கூட்டமாகத் துரத்துகின்றன.

ஆடுகள், கோழிகள் போன்றவற்றை தெருநாய்கள் தாக்குவதால் விவசாய குடும்பங்கள் பாதிக்கின்றன.

பொதுமக்களையும், முதியவர்களையும் நாய்கள் துரத்திக்‌ கடிக்கின்றன" எனக் கூறுகின்றனர்.

இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஜாப்ராபாத் பகுதி மக்கள் கடந்த வாரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் திரண்டு, "நாங்கள் இந்த நாய்களை வெறுக்கவில்லை. ஆனால், நம்மை பாதிக்கும் வகையில் இவை கட்டுப்பாடின்றி சுற்றித் திரிகின்றன.

சில சமயங்களில் மக்களின் உயிருக்கே ஆபத்தாக இருக்கிறது. தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்" என வலியுறுத்தினர்.

தெருநாய்க்கடிக்குள்ளான ஆட்டுக்குட்டி
தெருநாய்க்கடிக்குள்ளான ஆட்டுக்குட்டி

அதற்கு அதிகாரிகள், "தெரு நாய்கள் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால் அவற்றை பாதுகாப்பாக பிடித்து, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என உறுதியளித்தனர்.

அதிகாரிகளின் இந்த வாக்குறுதியைத் தொடர்ந்து பொதுமக்கள், "விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடுத்தக்கட்டமாக போராட்டத்தில் இறங்குவோம்" என்றனர்.

இந்தியாவில் இன்று தெருநாய் பிரச்னை என்பது உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரிக்கும் அளவுக்கு தீவிரமாக இருக்கிறது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வை எட்ட அரசு வேகமாக செயல்பட வேண்டும்.

திண்டுக்கல்: கிணற்று நீரால் கிராமத்தில் பரவும் தோல் நோய்; குடிநீருக்காக ஊர் விட்டு ஊர் போகும் அவலம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பெருமாள்கோவில்பட்டியில் உள்ள மக்கள் குடிநீருக்காக அங்கு உள்ளகிணற்று நீரையே நம்பியிருந்தனர். தற்போது கிணற்று நீர் சுகாதாரமானதாக இல்லை. அந்த நீரைக் குடித்ததால் தோல் சார்... மேலும் பார்க்க

பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). முதுவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாரிமுத்த... மேலும் பார்க்க

"இந்தியாதான் அமெரிக்காவையே வழிநடத்துகிறது" - ட்ரம்ப் பேச்சு குறித்து அண்ணாமலை

சென்னை IIT- நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து பேசியிருக்கும் பாஜக அண்ணாமலை, "கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கலந... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: "நோயாளிகளை மருத்துவப் பயனாளிகள் என அழையுங்கள்" - முதல்வர் கோரிக்கை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இன்று (ஆகஸ்ட் 2) இந்த மருத்துவ முகாம் திட்டத்தினை ... மேலும் பார்க்க

Vantara: கோவில் யானை அம்பானியின் வந்தாரா பூங்காவிற்கு மாற்றம்; மகாராஷ்டிராவில் வெடிக்கும் போராட்டம்!

மகாரஷ்டிரா, கோலாப்பூரின் நந்தினி மடத்தின் 36 வயது கோவில் யானையான 'மகாதேவி (மதுரி)', அம்பானியின் 'வந்தாரா' உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது பெரும் பேசுபொருளாகி வருகிறது. 1992ம் ஆண்டு முதல் அந்த மடத்... மேலும் பார்க்க

`சிபிசிஐடி விசாரிக்கக் கூடாது; போலீஸுக்கு அடிப்படை அறிவு இல்லையா?’ - கவின்குமார் விவகாரத்தில் திருமா

கவின்குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காவல்துறை அதிகாரிகளை மிகக் கடுமையான விமர்சித்த அக்கட்சியின் தலைவர் ... மேலும் பார்க்க