மதராஸி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்
அருணாச்சலப் பிரதேசத்தில் உண்டு உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர் பலியான நிகழ்வு சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி-யோமி மாவட்டத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவர் உடல் கருகி பலியானார். மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள், லுகி பூஜேன் (8), தனு பூஜேன் (9), மற்றும் தயி பூஜேன் (11) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேசமயம் பலியான மாணவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என காவல் கண்காணிப்பாளர் தோங்டோக் தெரிவித்தார். சம்பவம் நடந்த கிராமத்தில் மின் இணைப்பு இல்லாததால், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!
இதனிடையே சம்பவம் குறித்து விசாரிக்க போலீஸ் குழு ஒன்று அங்கு விரைந்துள்ளது. பபிகுருங் கிராமம், இந்திய ராணுவத்தின் கடைசி சோதனைச் சாவடிக்கு முன்பாக உள்ள தாதாடேஜ் கிராமத்தின் அருகே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.