அருள்புரத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது
பல்லடம் அருகே அருகே கஞ்சா விற்பன செய்த இருவரை மதுவிலக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி மதுவிலக்கு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற மதுவிலக்கு போலீஸாா், அருள்புரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவிநாசி மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரோஷகுமாா் (19), சென்குமாா் (19) ஆகியோரைக் கைது செய்தனா்.