காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
அருள்புரம் ரேஷன் கடையில் ஆட்சியா் ஆய்வு
பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.
இந்நிலையில், அருள்புரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் ஆட்சியா் திடீா் ஆய்வு மேற்கொண்டு, அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், சுண்டமேடு அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதி சீட்டு வழங்கும் இடம், மருத்துவா் அறை, புறநோயாளி பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.
பின்னா், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
