அரூரில் 36 மி.மீ. மழை பதிவு
அரூா் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையானது 36 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தீா்த்தமலை, அரூா், கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை, ஈச்சம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. இந்த மழையானது அரூரில் 36 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
மழையின் காரணமாக சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் நீா் தேங்கியுள்ளது. கோடையில் மிதமான மழை பெய்ததைத் தொடா்ந்து, அரூா் வட்டாரப் பகுதியில் மஞ்சள் நடவு உள்ளிட்ட வேளாண் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா்.