செய்திகள் :

அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

post image

இந்திய மின்னணு சந்தையில் விவோ ஒய் 400 5ஜி என்ற ஸ்மார்ட்போன் இன்று (ஆக. 4) அறிமுகமானது. ஸ்நாப்டிராகன் 4 மற்றும் 6000 mAh பேட்டரி திறன் கொண்டதால், மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

விவோ ஒய் 400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமான சில நாள்களிலேயே இந்த ஸ்மார்ட்போனும் அறிமுகமாகியுள்ளதால், அதன் சிறப்புகள் இதிலும் எதிரொலித்துள்ளன.

விவோ ஒய் 400 சிறப்பம்சங்கள்

  • விவோ ஒய் 400 ஸ்மார்ட்போனானது, 6.67 அங்குல அமோலிட் திரை கொண்டது. சுமுகமாக திரை இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. வெளிப்புற பயன்பாட்டின்போது திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1800 nits திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் 50MP கேமராவுடன் சோனி நிறுவனத்தின் IMX852 லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 2MP டெப்த் சென்சார் உடையது. நீருக்குள் இருந்தபடி புகைப்படம் எடுக்கலாம் என விவோ நம்பிக்கை வழங்குகிறது. நீர் மற்றும் தூசு புகாத்தன்மைக்காக IP68/69 திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • செய்யறிவு தொழில்நுட்பத்தில் பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

  • ஒலியை பல மொழிகளில் எழுத்தாக மாற்றக்கூடிய செய்யறிவு அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

  • பெரிய பத்தி உடைய சொற்களை அடுக்கவும், திருத்தவும் செய்யும்.

  • விடியோக்களில் இருந்தும் அதன் தரவுகளை வார்த்தைகளாக விவரிக்கும்.

  • கோப்புகளை பல்வேறு ஃபார்மட்களில் வழங்கும்

  • கேமராவில் ஒரு பொருளைக் காண்பித்தால், அது குறித்த மொத்த தரவுகளையும் எழுத்துகளாக காண்பிக்கும்.

  • புகைப்படங்களில் தேவையற்ற பின்புறங்களை நீக்கிக்கொள்ளும் செய்யறிவு அம்சங்கள் உள்ளடக்கியுள்ளது.

  • இத்தனை செய்யறிவு அம்சங்கள் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 20,000.

தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

இணைய விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டில் விவோ ஒய் 400 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால், குறிப்பிட்ட வங்கி கடன் அட்டைகளுக்கு (எஸ்பிஐ, ஃபெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, டிபிஎஸ் வங்கி, யெஸ் வங்கி) 10% தள்ளுபடி உள்ளது.

இதேபோன்று கூடுதலாக ரூ.1,000 போனஸ் தள்ளுபடியும் செய்யப்படுகிறது. ஆக. 7 முதல் நண்பகல் 12 மணி முதல் இதன் விற்பனை தொடங்கவுள்ளது. தற்போது முன்பதிவுகள் வரவேற்கப்படுவதாக விவோ அறிவித்துள்ளது.

ஜியோ பயனாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், எந்தவித கட்டணமும் செலுத்தாமல் 10 முன்னணி ஓடிடி தளங்களை 2 மாதங்களுக்கு பார்த்துக்கொள்ளலாம்.

இதையும் படிக்க | ஐபோன் 16இ மாடலுக்கு ரூ. 11,000 ஆஃபர்! எப்படி?

Vivo Y400 5G Launched in India with Snapdragon 4 Gen 2 SoC and 6,000mAh Battery

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

புதுதில்லி: ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் நிறுவனம் 2025 ஜூன் உடன் முடிவடைந்த முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 10 சதவிகிதம் உயர்ந்து ரூ.835 கோடியாக உள்ளது என்றுது.இதுவே ஒரு வருடத்திற்கு முன்ப... மேலும் பார்க்க

பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி சீராக உள்ளதாக மும்பை விமான நிலையம் பதிவு!

மும்பை: அதானி குழுமத்திற்கு சொந்தமான மும்பை சர்வதேச விமான நிலையம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஆண்டுக்கு ஆண்டு கிட்டத்தட்ட 1.36 கோடி பயணிகள் வளர்ச்சியைப் பதிவு செய்தது.நாட்டின் இரண்டாவது பரப... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மும்பை: தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வர்த்தக கட்டண நிச்சயமற்ற தன்மையால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவடைந்தது.அமெரிக்க அதிபர் டிரம்ப... மேலும் பார்க்க

உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் உலோகம், ஆட்டோ பங்குகள் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, சென்செக்ஸ் 419 புள்ளிகள் உயர்ந்து 81,000 புள்ளிகளாகவும், நிஃப்டி 157.40 புள்ளிகள் உயர்ந்து 24,722.75 புள்ளிகளாக நிறைவட... மேலும் பார்க்க

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

வாரத்தின் முதல் நாளான இன்று(ஆக. 4) பங்குச்சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,765.83 என்ற புள்ளிகளில் தொடங்கியது.பிற்பகல் 12.35 மணியளவில... மேலும் பார்க்க

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

புதுதில்லி: பிசி ஜூவல்லர்ஸ் கடந்த நான்கு மாதங்களில் அதன் நிகர கடனை 19 சதவிகிதம் குறைத்து ரூ.1,445 கோடியாகக் உள்ளதாக தெரிவித்தது. மேலும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாறும் என்று... மேலும் பார்க்க