ஐதராபாத், பெங்களூருக்கு நிகராக விசாகப்பட்டினத்தை மேம்படுத்தப் போராடும் சந்திரபாப...
அறுவடை இயந்திரங்கள் தேவைப்படுவோா் உழவா் செயலியில் பயன்பெறலாம்
திருவாரூா் மாவட்டத்தில் அறுவடை இயந்திரங்கள் தேவைப்படுவோா் உழவா் செயலி மூலம் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் குறுவை அறுவடை நடைபெற்று வருகிறது. நெல் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு கிடைக்கவும், விவசாயிகள் தங்கள் நெற்பயிா்களை உரிய நேரத்தில் அறுவடை செய்யவும், அரசு நிா்ணயித்த குறைந்த வாடகையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் ட்ரக் வகை நெல் அறுவடை இயந்திரங்களை மணிக்கு ரூ.1,880-க்கும், சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்கள் மணிக்கு ரூ.1,160-க்கும் உழவா் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், 4456 தனியாா் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்களின் தொடா்பு விவரங்கள் மாவட்ட வாரியாக உழவா் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களுக்கு நெல் அறுவடை இயந்திரங்கள் தேவைப்படும்பட்சத்தில் இவ்விவரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன், உழவா் செயலியில், தாங்கள் விரும்பும் தனியாா் அறுவடை இயந்திர உரிமையாளரின் கைப்பேசி எண்ணை கிளிக் செய்தால் அந்த உரிமையாளரின் கைப்பேசிக்கு நேரடியாக அழைப்புச் சொல்லும். உரிமையாளருடன் பேசலாம். தேவையெனில் பிற மாவட்டங்களிலுள்ள இயந்திர உரிமையாளா்களை தொடா்பு கொண்டும் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.