அணிவகுத்த டிஜிட்டல் பிரபலங்கள்! | Vikatan Digital Awards 2025 Red Carpet Clicks
அறுவை சிகிச்சை நடுவே நர்ஸுடன் பாலியல் செயலில் ஈடுபட்ட மருத்துவர் - இங்கிலாந்தில் அதிர்ச்சி!
பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் நோயாளியை விட்டுவிட்டு செவிலியருடன் பாலியல் செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மயக்கமருந்து நிபுணராகப் பணியாற்றுபவர் டாக்டர் சுஹைல் அஞ்சும்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே செப்டம்பர் மாதத்தில் இந்த விஷயம் நடந்துள்ளது.
அதாவது, சம்பவம் நடந்த அன்று காலை ஐந்து அறுவைச் சிகிச்சைகளுக்கு இவரே மயக்கமருந்து கொடுக்கும் நிபுணராக இருந்துள்ளார்.
மூன்றாவது அறுவைச் சிகிச்சையின் போது சக ஊழியரிடம் “இடைவெளி” என்று கூறிவிட்டு, அடுத்த அறுவைச் சிகிச்சை அறைக்குச் சென்றுள்ளார்.
அங்கு வேறு ஒரு செவிலியருடன் பாலியல் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவ உபகரணங்களை எடுப்பதற்காகச் சென்ற செவிலியர் ஒருவர் இதனைப் பார்த்திருக்கிறார். அதன் பின்னர் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் மருத்துவர் சுஹைல் அஞ்சும், அந்த செவிலியர் தனது கால் சட்டையை இறக்கிவிடத் தான் முற்பட்டார் என்று சமாளித்திருக்கிறார்.
அதன் பின்னர் விசாரணையில் தான் பாலியல் செயலில் செவிலியருடன் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து மருத்துவத் தீர்ப்பாயத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டது. டாக்டர் சுஹைல் அஞ்சும் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து டாக்டர் சுஹைல் கூறுகையில், “நான் உண்மையிலேயே வருந்துகிறேன், வெட்கப்படுகிறேன், எனது நடத்தை குறித்த தீவிரத்தை தற்போது உணர்கிறேன்” என்று அந்தத் தீர்ப்பாயத்தில் கூறியிருக்கிறார்.
அதன் பின்னர் அவர் சம்பந்தப்பட்ட பொது மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!