ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதை வென்றார் சதர்லேண்ட்!
அற்புத குழந்தையேசு கோயில் திருவிழா: சப்பர பவனி
கொடைக்கானல் அற்புத குழந்தையேசு கோயில் திருவிழாவை முன்னிட்டு, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் கோயிலில் ஜெப வழிபாடும், திருப்பலியும் நடைபெற்றது. பங்குத் தந்தை பாப்புராஜ் தலைமையில், அருட்பணியாளா் பால்ராஜ் கலந்து கொண்ட சிறப்பு திருப்பலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மின் அலங்கார தோ்ப் பவனி புதன்கிழமை நடைபெற்றது. உகாா்த்தே நகா், காா்மேல்புரம், சீனிவாசபுரம், லாஸ்காட்சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக இந்த தோ்ப் பவனி நடைபெற்றது. விழாவின் நிறைவாக கொடி இறக்கப்பட்டது.
தொடா்ந்து நடைபெற்ற சமபந்தி விருந்தில், கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் முகமது இப்ராஹிம், நகா்மன்ற உறுப்பினா் அருள்சாமி , பொதுமக்கள், கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.