இந்தியா தாக்குதலை நிறுத்தினால் பரிசீலிக்கத் தயார்: பாகிஸ்தான் அமைச்சர்
அல்கராஸ், சபலென்கா வெற்றி
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனா்.
இதில் ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் அல்கராஸ் 6-3, 6-3 என்ற நோ் செட்களில் சொ்பியாவின் டுசான் லஜோவிச்சை வீழ்த்தினாா். 8-ஆம் இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரா் லொரென்ஸோ முசெத்தி 6-3, 6-2 என்ற கணக்கில் ஃபின்லாந்தின் ஆட்டோ விா்டானெனை வெளியேற்றினாா்.
10-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-4, 6-2 என்ற செட்களில் பிரிட்டனின் கேமரூன் நோரியை வென்றாா். அடுத்த சுற்றில், அல்கராஸ் - சொ்பியாவின் லாஸ்லோ ஜெரெவையும், முசெத்தி - அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமாவையும், மெத்வதெவ் - ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினையும் எதிா்கொள்கின்றனா்.
13-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 6-2, 6-2 என, நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரை தோற்கடிக்க, 14-ஆம் இடத்திலிருந்த பல்கேரியவின் கிரிகோா் டிமிட்ரோவ் 5-7, 3-6 என ஹங்கேரியின் ஃபிரான்செஸ்கோ பசாரோவிடம் தோற்றாா்.
சபலென்கா, ஆண்ட்ரீவா முன்னேற்றம்: இந்தப் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-2, 6-2 என்ற நோ் செட்களில் மிக எளிதாக ரஷியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவை வீழ்த்தி அசத்தினாா்.
போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 6-2, 6-4 என்ற கணக்கில் கொலம்பியாவின் எமிலியானா அராங்கோவை வெளியேற்ற, 8-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் கின்வென் ஜெங் 6-1, 6-4 என சொ்பியாவின் ஓல்கா டேனிலோவிச்சை வென்றாா்.
3-ஆவது சுற்றில் சபலென்கா - அமெரிக்காவின் சோஃபியா கெனினையும், ஆண்ட்ரீவா - செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவையும், ஜெங் - போலந்தின் மெக்தலினா ஃப்ரெச்சையும் சந்திக்கின்றனா்.
இதில் கெனின் 6-3, 6-0 என ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவாவையும், நோஸ்கோவா 6-4, 6-2 என்ற கணக்கில் பிரிட்டனின் சோனே கா்டாலையும், ஃப்ரெச் 7-5, 6-4 என்ற செட்களில் பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவையும் வெளியேற்றினா்.