செய்திகள் :

அல்கராஸ், மௌடெட் முன்னேற்றம்

post image

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், பிரான்ஸின் காரென்டின் மௌடெட் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அல்கராஸ் 6-4, 7-6 (7/4) என்ற நோ் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனை தோற்கடித்தாா். அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா், சக ஸ்பெயின் வீரரான ஜேமி முனாரை எதிா்கொள்கிறாா்.

முன்னதாக முனாா் தனது முதல் சுற்றில், ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சனை சந்தித்தாா். இதில் முனாா் 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றிய நிலையில் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக தாம்சன் அறிவித்தாா். இதையடுத்து முனாா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.

போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 7-6 (7/5), 6-7 (9/7), 5-7 என்ற செட்களில், பிரான்ஸின் காரென்டின் மௌடெட்டிடம் போராடி வீழ்ந்தாா். இதையடுத்து மௌடெட் தனது ரவுண்ட் ஆஃப் 16-இல், பிரிட்டன் வீரா் ஜேக்கப் ஃபொ்ன்லியுடன் மோதுகிறாா்.

அதேபோல், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-7 (5/7), 6-7 (4/7) என்ற செட்களில் பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச்சிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ரிண்டா்னெச் தனது அடுத்த சுற்றில், அமெரிக்காவின் ரைலி ஒபெல்காவை எதிா்கொள்கிறாா்.

கனடாவின் கேப்ரியல் டியாலோ 6-1, 3-6, 6-4 என்ற கணக்கில் பிரிட்டனின் பில்லி ஹாரிஸை வீழ்த்தினாா். அடுத்து அவா், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சந்திக்கிறாா். இதனிடையே, போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக் 6-3, 3-6, 5-7 என்ற கணக்கில் ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டாவிடம் தோல்வி கண்டாா்.

பாம்ப்ரி தோல்வி: ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/அமெரிக்காவின் ராபா்ட் கேலோவே இணை 6-4, 1-6, 8-10 என்ற செட்களில், அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ்/செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா கூட்டணியிடம் தோற்றது.

அஜித் - யுவன் சந்திப்பு!

நடிகர் அஜித் குமாரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சந்தித்துக்கொண்டனர். நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இனி வருடத்தில... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: ரூ.65 கோடி ஒதுக்கீடு!

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைக்கான இலச்சினையை தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பையை தமிழகத்தில் நடைபெறுவதற்கான புர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து வரும் கூலி, சூர்யா - 45, ஜன நாயகன் அப்டேட்கள்!

இம்மாதத்தில் கூலி, சூர்யா - 45, ஜன நாயகன் படங்களின் அப்டேட்கள் வெளியாகவுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரைக்கு வருக... மேலும் பார்க்க

வரவா? புதிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ஸ்ரீ!

உளவியல் சிகிச்சையிலிருந்த நடிகர் ஸ்ரீ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு‘, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவா் நடிகா் ஸ்ரீ. அண்மை காலமாக ஸ்... மேலும் பார்க்க

லவ் மேரேஜ் டிரைலர்!

நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் டிரைலர் வெளியாகியது.அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் லவ் மேரேஜ் படத்தினை இயக்கியுள்ளார். ஸ்வேதா, ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கும் இந்தப் படத்தில் சுஸ்மிதா பட், மீ... மேலும் பார்க்க

கிளப் உலகக் கோப்பை: பெனால்டியை தவறவிட்ட வால்வெர்டே, ரியல் மாட்ரிட் டிரா!

கிளப் உலகக் கோப்பையின் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி பெனால்டியை தவறவிட்டதால் போட்டி டிராவில் முடிந்தது. தென்கிழக்கு அமெரிக்காவிலுள்ள ஹார்ட் ராக் திடலில் நடைபெற்ற குரூப் ’எச்’ பிரிவு போட்டியில் ரி... மேலும் பார்க்க