ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா மு...
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 அறிமுகம்..! சிறப்பம்சங்கள் என்ன?
டொயோட்டா நிறுவனத்தின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 கார் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள டொயோட்டா கார்கள் இந்தியாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறது. டொயோட்டாவின் ஃபார்ச்சூனர் கார்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இந்தியா முழுவதும் இருக்கிறது.
இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 கார் ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், புதுமையை சேர்க்கும் வகையில் ஹைபிரிட் மாடலில் பெட்ரோல் எடிசன் வெளியிடப்பட்டுள்ளது.

என்ஜின் மற்றும் திறன்
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 -காரின் மறுபதிப்பானது 3.5 லிட்டர் டுவின் டர்போ வி6 பெட்ரோல் என்ஜினுடன் 790 முறுக்குத் திசைவேகத்தில் 457 குதிரைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரானது சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் லெக்ஸஸ் எல்எக்ஸ் 700ஹெச், டன்ட்ரா மற்றும் சீக்வோயா போன்ற பிராண்டின் TNGA-F தளத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறத் தோற்றம்
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் லேண்ட் மற்றும் ஸ்போர்ட் என இரண்டு வகைகளில் கிடைக்கும். புதிய வகை காரில் பெரிய பம்பர்கள் மற்றும் காற்றுத் தடுப்பான்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த பிராண்ட் இப்போது ஒரு பெரிய 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் புதிய கிராபிக்ஸ் கொண்ட புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் கிளஸ்டரைச் சேர்த்துள்ளது.
விலை எவ்வளவு?
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 பெட்ரோல்-ஹைப்ரிட் விரைவில் ஆஸ்திரேலியாவிலும், அதைத் தொடர்ந்து பிற சர்வதேச சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் லேண்ட் க்ரூஸர் 300, 3.3 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. ZX மற்றும் GR ஸ்போர்ட் வகைகளுக்கு முறையே ஆரம்ப விலை ரூ.2.31 கோடி மற்றும் ரூ.2.41 கோடியில் கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.