பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து: இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?
டாலருக்கு நிகரான ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக முடிவு!
மும்பை: இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக நிறைவடைந்தது.
பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் டாலரின் வலிமைக்கு மத்தியில், இந்திய ரூபாய் மதிப்பு குறைந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அதிகரித்த கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்களின் விற்பனை அழுத்தமும் உள்ளூர் சந்தையை வெகுவாக எடைபோட்டது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.42 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.86.25 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.57 ஐ தொட்ட நிலையில், முடிவில் 30 காசுகள் சரிந்து ரூ.86.34 ஆக முடிந்தது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்திய ரூபாய் 30 காசுகள் குறைந்து டாலருக்கு நிகராக ரூ.86.34 ஆக நிறைவடைந்தது
இதையும் படிக்க: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் முடிவு!