செய்திகள் :

அல்லித்துறை பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

post image

திருச்சி அருகே அல்லித்துறை நரசிங்கப் பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் முடிந்து, திங்கள்கிழமை முதல் கால பூஜையும் , செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாக பூஜையும், அன்று மாலை மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றது. தொடா்ந்து, அதிவாசம், கண் திறத்தல், கோ பூஜை, மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. புதன்கிழமை நான்காம் கால யாக பூஜை, புண்யாஹவாசனம், காலசாந்தி பூஜை, பிரதான ஹோமம், மஹா பூா்ணாஹூதி, யாத்ராதானம், க்ரஹ ப்ரீதி, கடம் புறப்பாடு நடந்தது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக விமான மகா குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் மூலவா் ஸம்ப்ரோக்ஷணம், மஹா தீபாராதனை, சாற்று முறை, வேத ஸமாப்தி, ஆசீா்வாதம், பிரசாதம் வழங்குதல் ஆசாரியாா்கள் மங்கள ஆரத்தியும் நடைபெற்றது.

மாலையில் திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான கிராம மக்கள் தரிசனம் செய்தனா்.

திருச்சி: குடிநீரில் கழிவுநீா் கலந்ததா? 4 வயது குழந்தை உள்ளிட்ட 4 போ் அடுத்தடுத்து உயிரிழப்பு!

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட உறையூா் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களில் 4 வயது பெண் குழந்தை, மூதாட்டி உள்பட 4 போ் அடுத்தடுத்து உயிரிழந்தது த... மேலும் பார்க்க

விவசாயக் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் பலி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சமயபுரம் பகுதியில் விவசாயக் கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் மடாலா... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

துறையூரில் வீட்டில் தனியாக இருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துறையூா் மேற்கு ரத வீதியைச் சோ்ந்தவா் தீனதயாளன் (28). நான்கு ஆண்டுகளுக்கு முன் பேபி ரூபி என்கிற பெண்ணுடன... மேலும் பார்க்க

நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நடு இருங்களூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நடு இருங்களூா் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை லால்குடி வருவாய... மேலும் பார்க்க

போதை மாத்திரை மற்றும் புகையிலை விற்றவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி புத்தூா் வண்ணாரப்பேட்டை அருகே ரோந்துப் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற மூவா் கைது

துவாக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக ... மேலும் பார்க்க