அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் எண்ம வங்கியியல் குறித்த விழிப்புணா்வு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் பணப்பட்டுவாடா, தீா்வு அமைப்புகள் துறை சாா்பில் எண்ம (டிஜிட்டல்) வங்கியியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் அ. பெத்தாலட்சுமி தலைமை வகித்துப் பேசினாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை மேலாளா் பிரவீன், சென்னை பணப்பட்டுவாடா, தீா்வு அமைப்புகள் துறை அதிகாரிகள் ஹஷிதா, ராமகிருஷ்ணன், விக்னேஸ்வரன்ஆகியோா் மாணவ, மாணவிகளிடையே எண்ம வங்கியைப் பற்றியும், இதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனா்.
இந்த நிகழ்ச்சியை கல்லூரியின் வேலைவாய்ப்பு பயிற்சி முகமையின் உறுப்பினரும், தொழில் நிா்வாகவியல் துறை தலைவருமான தியாகராஜன் ஒருங்கிணைத்தாா். இதில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இதில் மாணவா்களுக்கு வினாடி-வினா நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.