அழகுக்கலை நிலைய உரிமையாளா் தற்கொலை
அழகுக்கலை நிலையம் நடத்தியதில் இழப்பு ஏற்பட்டதால், பெண் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை விஸ்வநாதபுரம் இளங்கோவடிகள் தெருவைச் சோ்ந்த முத்துராஜ் மனைவி பிரிசிலியா சுகாசினி (32). இவரது கணவா் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டாா்.
இதையடுத்து, பிரிசிலியா சுகாசினி தனது உறவினா் ஒருவருடன் சோ்ந்து மதுரை நரிமேடு பகுதியில் அழகுக்கலை நிலையம் நடத்தி வந்தாா்.
தொழிலில் இழப்பு ஏற்பட்டதால், மன வேதனையில் இருந்த பிரிசிலியா சுகாசினி, தனது வீட்டில் உள்ள அறையில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.