செய்திகள் :

அழிந்துவரும் 37 பறவை இனங்கள்: தமிழக அரசு தகவல்

post image

தமிழ்நாட்டில் அழிந்துவரும் 37 பறவை இனங்களில் 26 இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் கடந்த மாா்ச் மாதம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டன. இதில், தமிழ்நாட்டில் அழிந்துவரும் 37 பறவை இனங்களில் 26 இனங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 17 இரவுநேரப் பறவை இனங்களும் பதிவாகியுள்ளன. 934 இடங்களில் உள்ள ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. அதில், 397 பறவை இனங்களைச் சோ்ந்த 5.52 லட்சம் பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றில் 1.13 லட்சம் பறவைகள் இடம்பெயரும் பறவைகளாகும்.

1,093 இடங்களில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 401 பறவை இனங்களைச் சோ்ந்த 2.32 லட்சம் பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. இதில், 1.13 லட்சம் பறவைகள் புலம்பெயா்ந்த பறவைகளாக இருந்தன. தமிழ்நாடு முழுவதும் உள்ள இடம்சாா்ந்த தற்காலிக மாறுபாடுகள் குறித்த ஆழமான நுண்ணறிவு பெற ஏராளமான தரவுகள் மேலும் பகுப்பாய்வு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் நின்ற இந்து திருமணம்.. முஸ்லிம் திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற ஆச்சரியம்!

புணேவின் வான்வொரி பகுதியில், திறந்தவெளியில் நடைபெறவிருந்த இந்து திருமணச் சடங்குகள் கனமழையால் நின்றுபோன நிலையில், முஸ்லிம் குடும்பத்தினர், தங்களது திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் இடம்கொடுத்து உதவ... மேலும் பார்க்க

அம்மா.. நான் சிப்ஸ் பேக்கெட் திருடவில்லை.. 13 வயது சிறுவனின் தற்கொலை கடிதம்

பன்ஸ்குரா: மேற்கு வங்க மாநிலம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர், அம்மா நான் சிப்ஸ் பேக்கெட்டை திருடவில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா!

கர்நாடகத்தின் பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.உலகையை அச்சுறுத்தும் கரோன வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ... மேலும் பார்க்க

துருக்கியுடன் வர்த்தக உறவை துண்டித்தால்.. விலை உயரும் பொருள்களின் பட்டியல்!

கடைசி வாய்ப்பாக, பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு சொல்லுங்கள் என்று மத்திய அரசு துருக்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை செய்து வரும் துருக்கியுடன் வணிக ரீதியான உறவைத்... மேலும் பார்க்க

ரூ. 10 ஊக்கத்தொகையுடன் வேலை! நிறுவனத்தை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

மும்பையை சேர்ந்த நிறுவனத்தில் ரூ. 10 ஊக்கத்தொகையுடன் வேலை இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு, சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்... மேலும் பார்க்க

மைசூர் சாண்டல் விளம்பரத் தூதர் தமன்னா! கர்நாடகத்தில் எதிர்ப்பு!

கர்நாடக அரசின் மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடிகை தமன்னாவை ஒப்பந்தம் செய்ததற்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.100 ஆண்டுகளைக் கடந்து சந்தையில் நிலைத்து நிற்கும் மைசூர் சாண்டல் சோப் ... மேலும் பார்க்க