Arbitrage vs Alternative Investment Fund என்ன வித்தியாசம் | IPS Finance - 259 | ...
அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடம் கற்றுக் கொண்டேன்: தீப்தி சர்மா
அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார். அவர் அண்மையில் சர்வதேசப் போட்டிகளில் அவரது 300-வது விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினார்.
தோனியிடம் கற்றுக் கொண்டேன்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில், அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டதாக தீப்தி சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பிசிசிஐ-டம் பேசியதாவது: போட்டியில் அழுத்தமான சூழல்களைக் கையாள்வது எப்படி என்பதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடமிருந்து கற்றுக் கொண்டேன். தோனி விளையாடும்போதெல்லாம், தொலைக்காட்சி முன்பு அமர்ந்து, அவர் செயல்படும் விதத்தை கூர்ந்து கவனிப்பேன். எந்த ஒரு தருணத்திலும் அவர் அழுத்தத்தில் இருந்து நான் பார்த்ததில்லை. எந்த ஒரு சூழ்நிலையையும் அமைதியாக கையாண்டு போட்டியை முடித்துக் கொடுப்பார். என்னுடைய ஆட்டத்திலும் நான் அதனையே வளர்த்துக் கொண்டுள்ளேன்.
அனைத்து விஷயங்களையும் எளிதானதாக எடுத்துக் கொள்வேன். உதாரணமாக, பவர் பிளேவில் பந்துவீசுவதாக இருந்தாலும் சரி, அல்லது போட்டியின் இறுதிக்கட்டத்தில் பந்துவீசுவதாக இருந்தாலும் சரி அந்த பொறுப்பை எந்த ஒரு அழுத்தமுமின்றி ஏற்றுக்கொள்வேன். எனக்கு சவால்கள் பிடிக்கும். சவாலான சூழல்களில் அணிக்காக சிறப்பாக செயல்படுவது மிகவும் பிடிக்கும் என்றார்.
Indian player Deepti Sharma says she learned how to handle pressure from Dhoni.
இதையும் படிக்க: இந்திய அணியில் நிதீஷ் குமார் தொடர்ந்து இடம்பெற வேண்டும்: அனில் கும்ப்ளே