செய்திகள் :

அவசரத்திற்குக் கழிப்பறை பயன்படுத்திய முதியவர்; ரூ.800 வசூலித்த ஹோட்டல்; வைரல் பதிவின் பின்னணி என்ன?

post image

ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், வயதான பெண்மணி, வெறும் ஆறு நிமிடங்கள் கழிப்பறை பயன்படுத்துவதற்காக ரூபாய் 805 வசூலித்த சம்பவம் இணையவாசிகளைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள காது ஷியாம் கோயிலுக்கு ஒரு குடும்பம் தரிசனத்திற்காகச் சென்றுள்ளனர். தரிசனம் செய்யக் காத்திருந்தபோது வயதான பெண்மணிக்குக் கடுமையான வயிறு வலியும், குமட்டலும் ஏற்பட்டுள்ளது. அவர் நிற்கவே சிரமப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஒரு கழிப்பறையைத் தேடி உள்ளனர். ஆனால் அருகில் பொது குளியல் பகுதிகள் இருந்த போதிலும் சரியான கழிப்பறை இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி அருகிலிருந்த ஒரு ஹோட்டலை அணுகி உள்ளனர்.

Rajasthan Woman Charged Rs 800 For Using toilet
Rajasthan Woman Charged Rs 800 For Using toilet

வயதான பெண்ணின் நிலையைப் பார்த்தும், ஹோட்டல் வரவேற்பாளர் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கு 800 ரூபாய் கேட்டுள்ளார்.

இது குறித்த லிங்கின் பதிவு வைரலானது. அந்தப் பதிவில் அன்று நடந்த விவரங்கள் குறித்து எழுதப்பட்டிருந்தன.

”நாங்கள் தரிசனத்திற்காகக் காத்திருந்தபோது என் அம்மாவிற்குத் திடீரென உடல்நிலை மோசமானது. குமட்டலும், வயிறு வலியும் ஏற்பட்டது. அருகில் கழிப்பறையைத் தேடினோம் பொது குளியலறை இருந்தன.

அவரால் நிற்கக் கூட முடியவில்லை. இதனால் அருகில் உள்ள ஹோட்டலுக்கு விரைந்து சென்று அங்கு இருக்கும் நபரிடம் கேட்டபோது கழிப்பறை மட்டும் பயன்படுத்துவதற்கு 805 ரூபாய் கேட்டார்.

ஒரு பெண் வலியில் இருப்பதைப் பார்த்துவிட்டு, அடிப்படை மனித நேயம் இல்லாமல் விலை கேட்டார்கள்... 805 ரூபாய் செலுத்தி அம்மா அந்த கழிப்பறையைப் பயன்படுத்தினார்” என்றார்.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடும் ஒரு இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அவர்கள் பதிவிட்டது இணையத்தில் வைரலானது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"என்னோட நிலைமை யாருக்குமே வரக்கூடாது; ஆனாலும்... " - Rahul Tiky மனைவி தேவிகாஶ்ரீ பேட்டி

நகைச்சுவை வசனங்களுக்கு வாயசைப்பது, நகைச்சுவை வீடியோக்களை பதிவுசெய்து சிரிக்க வைப்பது எனப் பிரபலமடைந்த காமெடி யூடியூபர் ராகுல் டிக்கி, சாலை விபத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி உயிரிழந்த சம்பவம், அவரை சமூ... மேலும் பார்க்க

AI Mazu: பக்தர்களுக்கு ஆசி வழங்கும் டிஜிட்டல் தெய்வம்.. மலேசிய தியான்ஹோ கோயிலில் AI வழிபாடு

இன்றைய நவீன உலகில், அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்த நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சுகாதாரம், பராமரிப்பு தொடங்கி பொழுதுபோக்கு வரை செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு பெரி... மேலும் பார்க்க

பத்ம விருதுகள்: ``தனி முத்திரை பதித்த அன்புச் சகோதரர்கள்.." - புகழ்ந்து வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. பல துறைகளிலும் சிறந்து விளங... மேலும் பார்க்க

`ஆடி காரில் பால் வியாபாரம்' - ஹரியானாவை ஆச்சர்யத்தில் வியக்க வைத்த இளைஞன்

பிடித்த வேலையை செய்வதற்காக சிலர் அதிக சம்பளத்தில் இருக்கும் வேலையை கூட ராஜினாமா செய்வதுண்டு. அப்படித்தான் ஹரியானாவில் வாலிபர் ஒருவர் தனக்கு பிடித்த வேலையை செய்யவேண்டும் என்பதற்காக வங்கி வேலையை ராஜினாம... மேலும் பார்க்க

காேவை: `வாடிவாசல் வீரர்கள்' - அசரடித்த ஜல்லிக்கட்டு போட்டி

கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்ட... மேலும் பார்க்க

"எக்ஸ்ட்ரா பன்னீர் தரமாட்டீங்களா?" - மண்டபத்திற்குள் பஸ்ஸை விட்டு ஏற்றியவர் கைது; பின்னணி என்ன?

உத்தரப் பிரதேசத்தில் திருமண சாப்பாட்டில் போதிய அளவு பன்னீர் கொடுக்கவில்லை என்பதற்காக ஒருவர் செய்த காரியத்தால் திருமண மண்டபமே ரத்தக்களரியாகிவிட்டது.உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள ஹமித்... மேலும் பார்க்க