துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவிலிருந்து வெளியேற்ற முயற்சி: மல்லை சத்யா
அவசரமாகத் தரையிறங்கிய இண்டிகோ விமானம்! ஏன்?
பாட்னாவில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்று பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயணன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 169 பயணிகளுடன் இன்று காலை 8.42 மணிக்கு இண்டிகோ விமானம்(6E509) ஒன்று தில்லிக்கு புறப்பட்டது.
புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் மீண்டும் பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தை சரிசெய்யும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"விமானத்தில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக விமானத்தைத் தரையிறக்க விமானியிடமிருந்து கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வந்தது. அதன்படி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். பயணிகளை அனுப்ப வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம். எங்கள் பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. விமானத்தின் நிலை குறித்து பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்" என்று பாட்னா விமான நிலையம் கூறியுள்ளது.