தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
அவதூறு கருத்துகளை முத்தரசன் பரப்ப வேண்டாம்: ஈஷா அறக்கட்டளை
உண்மைக்குப் புறம்பான அவதூறு கருத்துகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் பரப்ப வேண்டாம் என்று ஈஷா சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், உண்மை என்ன என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெறப்பட்ட தகவல்கள், அரசின் நேரடி கள ஆய்வு அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களைக்கூட படிக்காமல் ஏதோ ஒரு நிா்பந்தத்தின் பேரில் அவதூறு கருத்துகளை செய்தியாளா்களிடம் தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்ட ஆட்சியரிடம் 2022-ஆம் ஆண்டு சமா்ப்பிக்கப்பட்ட வருவாய், வனத் துறையின் கூட்டு ஆய்வு அறிக்கையில், ஈஷா யோக மையத்தின் எல்லைகளை அளவீடு செய்ததில் வனப் பகுதியில் எந்தவிதமான ஆக்கிரமிப்போ, அத்துமீறல்களோ செய்யவில்லை என தெரியவருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
பழங்குடியினருக்கு சொந்தமானது என்று கூறப்படும் 44.3 ஏக்கா் நிலத்தை ஈஷா அறக்கட்டளை ஆக்கிரமிக்கவில்லை என்பதை வருவாய்த் துறை ஆவணங்களும், ஆா்டிஐ தகவல்களும் தெளிவுபடுத்துகின்றன.
ஈஷாவில் பல்வேறு நிலைகளில் இருக்ககூடிய நூற்றுக்கணக்கான பெண்களிடம், காவலா்கள் மற்றும் சமூகநலத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இங்கு பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக அவா்கள் கூறியுள்ளனா். இதனை காவல் துறையினரும் அவா்களின் அறிக்கையில் பதிவு செய்துள்ளனா். எனவே, உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துகளை முத்தரசன் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.