செய்திகள் :

"அவர் எதிர்கட்சித் தலைவர் குற்றம் சொல்வது அவரின் கடமை"- முதல்வர் ஸ்டாலின் கூறியதென்ன?

post image
ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை கண்டிராத மழை பெய்திருக்கிறது. அதுமட்டுமின்றி வழக்கத்திற்கு மாறாக அதிகமாக மழை பெய்திருக்கிறது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 900 மின் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தண்ணீர் வடிந்த பகுதிகளில் உடனுக்குடன் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மழை முழுமையாக நின்றதற்குப் பிறகு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்டு இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். உயிரிழந்தோர் குடும்பங்கள், கால்நடைகள், சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழுவை அனுப்ப மத்திய அரசிடம் கோருவோம். பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் நிவாரணம் கோரிக்கை வைப்போம். நிவாரண நிதி தருவது ஒன்றிய அரசின் கடமை. ஆனால் ஒவ்வொரு முறையும் அதைச் செய்ய மறுக்கிறார்கள்" என்றார்.

ஸ்டாலின்

மேலும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஸ்டாலின், "அவர் எதிர்கட்சி தலைவர் குற்றம் சொல்வதுதான் அவரின் கடமை. ஆனால் அதைப் பற்றி நாங்கள் கவலைபடுவதில்லை. மக்களுக்குத் தெரியும் எந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று" எனப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Senthil Balaji: `உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது; பதவி நீக்குங்கள்’ - முதல்வரை சாடிய ராமதாஸ்

சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு மிகநீண்ட இழுபறிக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி பிணை வழங்கியது. பிணையில் வந்த செந்தில் பாலாஜி அமைச்சராக பதவ... மேலும் பார்க்க

Nitin Gadkari: `அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த...' - யாரைச் சொல்கிறார் நிதின் கட்கரி

பிரதமர் மோடியின் கேபினெட்டில் மத்திய நெடுஞ்சாலைத் துறையைக் கவனித்துவரும் நிதின் கட்கரி, `அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த கடல்' என்று அரசியல் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார்.நாக்பூரில் '... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 'உள்துறை தான் வேண்டும்' - அடம் பிடிக்கும் ஷிண்டே, அசராத பாஜக

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அறுதிப்பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ள போதிலும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. முதல்வர் பதவியை பா.ஜ.க-விற்கு விட்டுக்கொடுத்துள... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்; அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்; நிலவரம் என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நான்கு ரோடு சாலை கடை காவல் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் போன்றவற்றில் மழை நீர் சூழ்ந்தது. இந்த மழை நீரால் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள... மேலும் பார்க்க

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: வசமாக சிக்கிக் கொண்டதா திமுக அரசு?!

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த மதுரை - அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுடன் வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்திருக்கிறது. இதற்கு பொதுமக்கள், விவச... மேலும் பார்க்க