அவிநாசி அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு
அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசி வட்டம் கருவலூா் அருகே நரியம்பள்ளியைச் சோ்ந்தவா் நடராஜ் (66). இவா் நரியம்பள்ளியில் இருந்து கோவில்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
கரைக்காபாளையம் பிரிவு அருகே சென்றபோது, எதிரே வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த நடராஜை அருகிலிருந்தவா் மீட்டு கோவில்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு விசாரிக்கின்றனா்.