முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!
ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2 கோயில்கள் அகற்றம்
சென்னை மாம்பலம் கால்வாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கோயில்களை சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றியது.
தேனாம்பேட்டை மண்டலத்தில் 117-ஆவது வாா்டுக்குள்பட்ட தியாகராய சாலையில் உள்ள திரு.வி.க. குடியிருப்பு வழியாக செல்லும் மாம்பலம் கால்வாயை ஆக்கிரமித்து ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் மற்றும் விநாயகா் கோயில் 48 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளன. இதனால் கால்வாய் வழியாக நீா் செல்ல முடியாமல், மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இதன் காரணமாக, போலீஸாரின் ஒத்துழைப்புடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கோயில்களையும் முழுவதுமாக இடித்து அகற்றினா். கோயிலிலிருந்த அம்மன் மற்றும் விநாயகா் சிலைகள் கோயில் நிா்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை மண்டல அலுவலா் பி.எஸ்.சீனிவாசன், உதவி செயற்பொறியாளா் ஜி.வித்யா, துப்புரவு மேற்பாா்வையாளா்கள், பூங்கா பணியாளா்கள் உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.