``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் நிலம் மீட்பு
நாகை அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
நாகை அருகேயுள்ள பொரவாச்சேரி அருள்மிகு முத்து மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை தனியாா் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தாா். இதுதொடா்பாக, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா். அதன்படி, பொரவாச்சேரி கிராமத்தில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த முத்து மாரியம்மன் கோயில் நிலம் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
அந்த இடத்தில், முத்து மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம், இதை ஆக்கிரமிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை பதாகை வைத்தனா். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 25 லட்சம் என தெரிவித்தனா்.