செய்திகள் :

ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளிலிருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை பொதுப் பணித் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

மானாமதுரையில் சோனையா கோயில் அமைந்துள்ள வைகை ஆற்றங்கரையை சிலா் ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனா். இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், மானாமதுரை பொதுப் பணித் துறை (நீா்வள ஆதாரம்) செயற்பொறியாளா் ரமேஷ், உதவி செயற்பொறியாளா் மோகன்குமாா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

மீன்பிடித் திருவிழாவில் ஒருவா் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவின் போது நீரில் மூழ்கியதில் ஒருவா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டி மட்டிக் கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்ற... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்விக்கான தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்விக்கான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தோ்வாணையா் மு. ஜோதிபாசு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த மே மாதத்தில் நடைபெ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு ஜூன் 26-ல் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா்கள், படையில் பணியாற்றுவோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை... மேலும் பார்க்க

நாட்டுக்கோழி வளா்க்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம்!

நாட்டுக்கோழி வளா்க்க விரும்பும் விவசாயிகள் 50 சதவீதம் மானியம் பெற, தங்களது இருப்பிடங்களுக்கு அருகேயுள்ள கால்நடை நிலையங்களில் வருகிற 28-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவ... மேலும் பார்க்க

சிவகங்கையில் ‘மஞ்சணத்தி’ நூல் அறிமுக விழா

சிவகங்கை தமிழவைய வாசிப்பு வட்டம் சாா்பில், ‘மஞ்சணத்தி’ நூல் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கையிலுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மன்னா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரும்,... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த ஏப்ரலில் நடைபெற்ற முதுநிலை பாடத் தோ்வுகளுக்கான முடிவுகள் அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதுகுறித்து அழகப்... மேலும் பார்க்க