செய்திகள் :

ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு: விவசாயி தீக்குளிக்க முயற்சி

post image

வத்திராயிருப்பு அருகே ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயி செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

சுந்தரபாண்டியம் பகுதியில் உள்ள செங்குளம் கண்மாய் நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து 7 வீடுகள், பன்றித் தொழுவம் ஆகியவை கட்டப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்துமாறு ஆக்கிரமிப்பாளா்களுக்கு வருவாய்த் துறை சாா்பில், கடந்த மாதம் குறிப்பாணை வழங்கப்பட்டது. மேலும், நீா்நிலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என வருவாய்த் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கால அவகாசம் முடிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் நீா்வளத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, திடீரென சுந்தரபாண்டியம் தாட்கோ குடியிருப்பைச் சோ்ந்த மூா்த்தி (55) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரைக் காப்பாற்றினா். பின்னா், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.சிவகாசி-திருத்தங்கல் சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காமராஜா் பூங்கா முன் ஒருவா் கையில் பையுடன் சந்த... மேலும் பார்க்க

திருத்தங்கலில் சுகாதார வளாகக் கட்டடம் அகற்றம்

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் பயன்பாட்டில் இல்லாத இரு சுகாதார வளாகக் கட்டடம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டன.திருத்தங்கல் செங்குளம் கண்மாய் பகுதியில் பயன்பாடின்றி 5 சுகாதா... மேலும் பார்க்க

சிவகாசியில் சுற்றுவட்டச் சாலைப் பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தல்

சிவகாசியில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகாசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடந்த 2012-ஆம் ஆண்டு சுற்றுவட்டச் சாலை அமைக்க முடிவ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குடுவை, முத்திரை

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண் குடுவை, முத்திரை, சங்கு வளையல்கள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத... மேலும் பார்க்க

உலா் களம் அமைக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உலா் களம் இல்லாததால், அறுவடை செய்த பயிா்களை நான்கு வழிச் சாலையில் கொட்டி விவசாயிகள் உலா்த்தி வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பூவாணி, மீனாட்சிபுரம், முத்துலிங்காபுரம... மேலும் பார்க்க

தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

ராஜபாளையம் அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை, வாழை மரங்களை திங்கள்கிழமை இரவு சேதப்படுத்தின. விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் கம்பத்து ஊருணி பகுதியில் சுரேஷ்குமாருக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க